இக்பால் அலி-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பை எந்தவொரு தொலைக்காட்சியிலும் நேரடியாக காட்டப்படாத சந்தப்பத்தில் தேசிய ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவில் மட்டும் நேற்று இரவு 7.00 மணி அளவில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை என்பது தமிழ் ஊடகத்துறைக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களினது கவனத்தை ஈர்த்த செய்தியாகவும் கொள்ளவேண்டியுள்ளதாக பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
19 வது அரசியல் சீர் யாப்பு திருத்த வாக்கெடுப்புத் தொடர்பாக தகவல்களை அறிந்து கொள்வதற்காக பொது மக்கள் ஊடகங்களை பெரு ஆவலுடன் காத்திருந்தனர். எந்தவொரு தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தவது சரி உடனுடக்குடன் நாடாளுமன்ற விவகாரங்களை அறிந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு நேற்று 29-04-2015 நாட்டிலுள்ள அனைத்து மக்களிடமும் இருந்தது.
பொது மக்கள் பாராளுமன்றத்தின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வதற்காக தங்களது வீடுகளிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் இருந்து கொண்டு ஒவ்வொரு சனல்களாக மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவில் மட்டும் நேரடியாக செய்தி ஒளிபரப்பப்பட்டமை என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
இந்த வாக்கெடுப்புத் தொடர்பாக பெரு ஆவலுடன் காத்திருந்த சிங்கள மக்களுக்கு கூட எதிர்பாராதவிதமான தமிழ் செய்தியை பார்த்து அறிந்து கொள்ளமளவுக்கு ஒரு மாற்றம் காணப்பட்டுள்ளது.
இந்த நேரடி ஒளிபரப்புச் செய்தியை தமிழ் பேசும் மக்கள் மட்டும் மல்ல கணிசமாளவு சிங்கள மக்களும் பார்த்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இன்றைய தமிழ் செய்தி ஒளிபரப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
19வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் முழு நாட்டுக்கும் , மக்களுக்கும் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு புண்ணிய காரியமாக அமைந்தது போல் தமிழ் சுதந்திர ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு ஒரு ஏணிப்படியாக இந்த நிகழ்வு அதி முக்கியத்துவம் பெறுகின்றது என்று குறிப்பிடலாம்.
இந்தச் செய்திப் பிரிவின் பணிப்பாளர் யூ. எல் யாகூப் மற்றும் அவரது உத்தியோர்கஸ்தர் குழு அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஊடகம் என்பது பொது மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான முக்கிய கருவியாகக் கருதப்படுகின்றன. இதற்கேற்ப இந்த ஊடகத்துறை மென்மேலும் வளர வேண்டும் என்பது எல்லோருடைய ஆவாவாகும்.
(ச)