19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது இன்னும் பூரணமாகவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெவித்துள்ளார்.
20ம் திருத்தத்தை நிறைவேற்றிய பின்பே அது பூரணமடையும் என கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.
19வது திருத்தச் சட்டம் குறித்த விவாதம் இனி வேண்டாம் என்றும் அதனை செயற்படுத்திப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
19வது திருத்தத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுவதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ச