19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் ஊடகங்களுக்கு எதிராகவுள்ள சரத்துக்கள் நீக்கம்- பிரதமர்

19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் ஊடகங்களுக்கு எதிராகவுள்ள சரத்துக்களை நீக்குவதற்கு பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தின் போது இந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதமருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய ஊடகங்களுக்கு எதிராகவுள்ள சரத்துக்களை அகற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

இதுபற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்கள் தொடர்பான குறித்த சரத்து நீக்கப்படும் என்று தெரிவித்தார்

இதன்பின்னர் உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, 19வது திருத்தச்சட்டமூலம் நாட்டின் எதிர்கால நலன்கருதி கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே இதற்கு கட்சி பேதமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்று அவர் கேட்டு;க்கொண்டார்

19வது அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மன்றில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் நிமால் ஸ்ரீபால டிசில்வா, தமது அதிகாரங்களை குறைப்பதற்கு எந்தஒரு ஜனாதிபதியும் விரும்பமாட்டார்

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அதிகாரத்தை குறைத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முன்வந்துள்ளமைக்காக கௌரவப்படுத்தப்படவேண்டும் என்று சில்வா தெரிவித்தார்

19வது அரசியலமைப்பில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இன்று நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டு இணக்கம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

19வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளி;ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீhமானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கையில் முன்னதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது உட்பட்ட திருத்தங்களை கொண்ட 19வது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -