கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதால் 19 ஆவது திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் கலந்துகொண்டுள்ள குறித்த கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் சில முரண்பாடான கருத்துக்களும் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும் அதுவும் மேலும் தாமதத்தை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப் படுகிறது
.
ஏற்கனவே 19ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.