அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு இல்முல் ஆஸ்ர் கல்வி மன்றத்தினால் கொழும்பு மாநகரில் உள்ள 6 பாடசாலைகளின் தரம் 9,10ஆண்டு 50 மாணவர்கள் மாதாந்தம் ருபா 1500 வீதம் 1 வருடத்திற்கான புலமைப்பரிசில்கள் திட்டம் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.
இக் கல்வி மன்றத்தின் தலைவர் நாசீர் ஹாஜியின் தணிப்பட்ட நிதியில் இத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பில் வாழும் முஸ்லீம் மாணவ மாணவிகளது கல்வித்தரத்தினை உயர்த்துவதன் நோக்கமே அவர் இததிட்த்தினை இவ்வருடத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பில் வாழும் வறிய மாணவர்கள் 9ஆம் ஆண்டு 10 ஆண்டு மாணவர்களுக்கு இப் புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படுகின்றது. இவர்கள் இப்பணத்தினை டியுசன் வகுப்புக்களுக்கு செலுத்த முடியும். என நாசீர் கூறினார்.
இந் நிகழ்வில் நளிமி யு.கே. றமீஸ், மொரட்டுவை அரபா பாடசாலையின் அதிபர் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்.எம்.எம். ரெசீனும் கலந்து கொண்டு கொழும்பு மாவட்டத்தின் கல்விpயின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.