முஜிபுர் ரஹ்மானின் தேசியக் கொடி சபந்தமான கோரிக்கை மேல் மாகாண சபையில் நிராகரிப்பு!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

லங்கையில் இருக்கும் அரசியலமைப்பின் படி தேசியக் கொடியானது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இருக்கும் சில இனவாத அமைப்புக்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகவும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ இனவாத்தை தூண்டி ஆட்சியினை கைப்பற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கின் அடிப்படையில்  தேசியக் கொடியில் சிறுபான்மை இனங்களை பிரதி நிதித்துவப் படுத்துக்கின்ற நிறங்களையும், பல அங்கங்களையும் அகற்ற வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்ற அவர்களுடைய நிகழ்வுகளில் பகிரங்கமாக வழியுறுத்தி வந்துள்ளனர். 

என கடந்த செவ்வாய்க் கிழமை (28.04.2015) மேல் மாகாண சபை கூடியபோது உருப்பினர் முஜிபுர் ரஃமான்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய முஜிபுர் ரஹ்மன் இதனை மேல் மாகாண சபையானது வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பதோடு இந்த இனவாதக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கெதிராக அரசாங்கம் உடநடியாக சட்டநடவடிக்கை எடுக்க எனற வேண்டுகோளினை கோரிக்கையாக முன்வைத்த வேலையில் மகஜன எக்சத் பெறமுன கட்சியின் அரசாங்கத்தை  பிரதி நிதித்துவப்படுத்தும் சிசிரஜயக்கொடி எனும் உருப்பினர் தேசியக் கொடி சம்பந்தமான விவகாரம் நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதனால் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறினார். 

இதன் போது குறிக்கிட்ட முஜிபுர் ரஹ்மான் இது நீதி மன்றத்தில் இருக்கும் விடயம் என்பதனால் நாங்கள் விவாததுக்கு எடுதுத்துக்கொள்ளுமாறு கூறவில்லை மாறாக இதற்குப் பின்னால் அரசியல் பின்னனி இருப்பதனால் இதில் இருக்கின்ற ரசியல் காரணங்களைப் பற்றி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்த பொழுது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன் போது சபையின் தவிசாளராக செயற்பட்ட சுனில் விஜயரத்ன குறுக்கிட்டு இதனை சபையில் உள்ள உருப்பினர்களின் ஏகோபித்த முடிவின்படி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார். 

அந்நிலையில் சபை உருப்பினர்களின் விருப்பத்துக்கு விடப்பட்ட  வேலையில் அரசாங்கத்தை சார்ந்த சிறீலங்க சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளை சேர்ந்த உருப்பினர்கள் இதனை விவாதத்திற்கு எடுக்க முடியாது என எதிர்ப்பினை வெளியிட்டனர். 

எதிர்ப்பு தெரிவித்து 31 உருப்பினர்களும் ஆதரவாக 24 உருப்பினர்களும் வாக்களித்த நிலையில் ஜாதிகஹெல உருமய உருப்பினர்களும் அரசாங்கத்தின் சார்பாக உள்ள ஹிருனிக்கா பிரேமசந்ர போன்றோர் ஆதரவாக வாக்களித்த நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதி நிதித்துவப்படுத்தும் உருப்பினர்கள் இருவரும் வெளிநடப்புச் செய்தனர்.(sa)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -