சர்மிளா சையத் தொடர்ந்தும் மிரட்டல்களை சந்தித்து வருகிறார்!

பிபிசிக்கு வழங்கிய செவ்வியொன்றில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்க வேண்டும் உள்ளிட்ட சர்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்ட இலங்கையைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சர்மிளா சையத் தொடர்ந்தும் மிரட்டல்களை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. 

கடந்த 2012ம் ஆண்டு சர்மிளா சையத்தின் சிறகு முளைத்த பெண் என்ற கவிதை நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். 

குறித்த நூலில் விபச்சாரி ஒருவர் குறித்த கவிதை அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  அந்த செவ்வியின் பின்னர் அவருக்கு இலங்கையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், தனது பிள்ளையுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். 

இந்தநிலையில் அவரது உம்மத் என்ற நாவலில் கூறப்பட்ட கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்தன. 

எதுஎவ்வாறு இருப்பினும் இந்தியாவிலும் அவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் இதனால் அவர் மறைந்து வாழ்வதாகவும் தெரியவருகின்றது. 

சர்மிளாவைப் பற்றிய அவதூறுகளும் பெருகிவருகின்றன. அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியாகின. 

மறுபுறம் சர்மிளாவை பாதுகாக்குமாறும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -