அம்பாறையில் புதிய நீர் வழங்கல் அலுவலகத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

அபு அலா -
ம்பாறை 3ஆம் கட்ட நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மத்திய முகாம் - நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரிவில் புதிய நீர் வழங்கல் அலுவலகம், பொறுப்பதிகாரிக்கான வதிவிடக் கட்டிடம் ஆகியவற்றிக்கான ஆரம்ப வேலை திட்டம் கடந்த சனிக்கிழமை மாலை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய முகாம் அமைப்பாளர் எம்.எச்.லத்திப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர் ஆரிப் சம்சுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், மௌலவி எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பலரும், நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -