ஏ.எம்.றிகாஸ்-
தொப்பிகல பகுதியை அண்மித்த அரசாங்க காட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை பைசிக்களில் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஒன்பது பைசிக்கள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.ஆர்.விஜயவிக்ரம தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இம்மரக்குற்றிகள் காட்டுவழியாக கொண்டுவரப்பட்டவேளை வந்தாறுமூலை உப்போடை வீதியில் கடமையிலிருந்த பொலிஸார் இவர்களைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த பைசிக்கள்களில் (செயின்) சுற்றுச் சங்கிலி அகற்றப்பட்டு முன்சில்லுக்கு விஷேட ஸ்பிறிங் பொருத்தப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. பைசிக்களுக்குப் பாதிப்பின்றி பாரத்தை சுமப்பதற்கு இந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகிறது.