எஸ்.எம்.அஜூஹான்-
கல்முனை சந்தை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த கடைகள் மற்றும் அவற்றுள் இருந்த உடமைகளுக்குமான நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கொண்டு வந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நஸ்டஈடுகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தீ விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது கவலையை வெளியிட்டுள்ளதுடன் கல்முனை மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவு சகல வசதிகளும் கொண்டதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தான் கல்முனை மேயராக இருந்தபோது 2002ம் ஆண்டளவில் தீ அணைக்கும் பிரிவு அரம்பிக்கப்பட்டதாகவும் இன்று சகல வசதிகளும் கொண்டதாக தீ அணைக்கும் பிரிவு இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். அந்த வகையில் அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேசியுள்ளேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.sa
ச