காரைதீவில் மதுபானசாலைக்கெதிரான ஆர்ப்பாட்டம்!

சுலைமான் றாபி, சுலக்சன் -
து எனும் அரக்கனை அழித்தொழிப்பதற்காக வேண்டி, காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் காணப்படும் மதுபானசாலையினை அகற்றுவதற்கான மாபெரும் சாத்வீகப் போராட்டம் இன்று (29) காலை காரைதீவு பிரதேச செயலகத்தின் முன்னால் இடம்பெற்றது. 

காரைதீவில் காணப்படும் சுமார் 117 சமய மற்றும் சமூக அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட சமயத்தலைவர்கள் கலந்து கொண்டதோடு, இந்த சாத்வீகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்; 

உத்தம ஜனாதிபதியே! 
மதுபானசாலையை உடன் அகற்றி உறவுகளைக் காப்பாற்று! 
மதுசாலை உரிமையாளரை உடன் வெளியேற்று! 
மதுசாலைக் கட்டிட உரிமையாளரே! 
காசுக்காக சமூகத்தை சீரழிக்காதே! 
அரச அதிபரே!
மதுவினால் மதி கெட்டுப் போகும் மாணவர்களின் கல்வித்தரத்தினைக் காப்பாற்று! 
பெண்களின் கண்ணீர் துடைக்க மதுசாலையை உடன் வெளியேற்று! 
பிரதேச செயலாளரே! 
மக்களின் தீர்ப்பினை உடன் நிறைவேற்று! 

போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணமாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறிப்பிட்ட பிரதேசத்தில் காணப்படும் இந்த மதுபானசாலையினால் நாளுக்குநாள் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு கூடுதலாக இளைஞர்கள் இதற்கு அடிமையாகின்றனர். மேலும் இந்த மதுபானசாலை காணப்படும் பிரதான வீதியில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதோடு நாளுக்குநாள் பெண்களும் தங்கள் வீடுகளில் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் கடந்த சாத்வீகப் போராட்டமானது எதுவித முடிவுகள் அற்ற நிலையில் பிரதான வீதியை மறைத்து போக்குவரத்தை சுமார் 20 நிமிடங்கள் தடுத்து தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்றது. இதன் இடையே காரைதீவு பிரதேசசெயலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்னர்.

போராட்ட இடத்துக்கு வருகை தந்த காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் அவர்கள்; தான் மதுவரி திணைக்கள ஆணையாளரை தொடர்பு கொண்டு கதைத்தபோது இன்றிலிருந்து(29) மதுசாலை மூடுவதற்கான விசாரனை முடியும் வரை மதுசாலை மூடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்று கூறியதோமு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மூலமாக மதுசாலை மூடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுசாலை மூடச்செய்தார். மதுசாலையை மூடுவதற்கான விசாரணைகள் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் இவ் சாத்வீக போராட்டத்தை ஏற்பாடு செய்த இந்து சமய விருத்திசங்கத்தினர் சாத்வீக போராட்டத்தை வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -