ஐம்பதுக்கு ஐம்பது கலப்பு தேர்தல்முறையால் எமது பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்படும்- மன்சூர்

புதிய தேர்தல் திருத்தத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்ற அடிப்படையில் விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறைமை உள்ளடக்கப்பட வேண்டும். அதன் மூலமே முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை பிரதிநிதித்தவங்கள் பாதுகாக்கப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் ரஹுமத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சி, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டும் கலப்பு முறைமையை மையப்படுத்திய தமது முன்மொழிவுகளை செய்துள்ளன. 

இவ்முன்மொழிவுகளை கருதுகையில் பெரும்பான்மை இனத்தின் பிரதிநிதித்துவத்தை பாரர்ளுமன்றில் பெரும்பான்மையாக நிலைநிறுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றார்கள். 
இதனால் சிறுபான்மை இன மற்றும் சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. இந்த நிலமையானது எதிர்காலத்தில் எமது மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன.

நாம் தேர்தல் திருத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஜனநாயகப் பண்பின் உச்சமாக முன்மொழியப்பட்டுள்ள விகிதாசார முறையில் விருப்பு வாக்கு முறை உள்ளீர்க்கப்பட்டுள்ளமை குறைபாடாக காணப்படுகின்றது. அனைவரும் அரசியலில் பிரதிபலிப்பதற்கு இடமளிக்கப்படவேண்டும். ஆகவே விருப்பு வாக்குமுறை நீக்கப்படவேண்டும். 

அதேநேரம் கலப்பு தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் விகிதாசர, தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐம்பதுக்கு ஐம்பது சதவீதத்தில் அமைவதன் மூலம் எமது பிரதிநிதித்துவங்களில் வீழ்ச்சி ஏற்பாடாது தடுக்க முடியும். 

அத்துடன் புதிய தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் அது தொடர்பில் மக்கள் தெளிவூட்டல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தபடவேண்டியது அவசியம். இவற்றை விடுத்து அவசரமாக கொண்டு வரப்படும் எந்தவொரு திருத்தங்களையும் மு.கா நிராகரிக்கும் என்றுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -