பாரத லக்ஷமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர கொலை வழக்கு மே மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பவித்ரா தென்னகோன் வழக்கை ஒத்திவைத்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகள் 12 பேர் இன்று நீதிமன்றில் ஆஜரானபோதும் பிரதான பிரதிவாதி பிரியந்த ஜனக்க என்பவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. 

குறித்த நபருக்கு அழைப்பாணை விடுப்பதில் சிக்கல் உள்ளதாகவும் அதனை செய்ய முடியாது போனால் அவர் இன்றி விசாரணை நடத்துமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். 

இதேவேளை, குறித்த வழக்கின் பிரதிவாதியான சமிந்த டி ஜயனாத் 10 லட்சம் பெறுமதியா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -