மருதமுனை கபீர் பள்ளிவாயல் நிர்மாணப் பணியினை முன்னெடுக்க அமைச்சர் ஹக்கீம் முன்வரவேண்டும்!

அபு அலா -

ருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாயல் கட்டிட வேலைகளை பார்வையிட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை (25) விஜயத்தை மேற்கொண்டு பள்ளிவாயல் கட்டிட வேலைகளை பார்வையிட்டார்.
இந்த விஜயத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், மௌலவி எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பலரும் கொண்டனர்.

மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணியின் வேலைகளை மேற்கொண்டு செல்ல அதற்கான சகல நிதிகளையும் உங்களது அமைச்சின் ஊடாகவோ அல்லது வெளிநாட்டிலுள்ள தனவந்தர்கள் ஊடாகவோ பெற்றுத்தர முழு ஏற்பாடுகளையும் செய்துதர வேண்டும் என்று பள்ளிவாயல் நிருவாகத்தினர் எல்லோராலும் முன்வைக்கப்பட்டது. 

அத்துடன் மருதமுனை பிரதேசத்துக்கான ஒரு பிரதேச சபையை பெற்றுத்தரவேண்டும். மருதமுனை பிரதேசத்திலுள்ளவர்கள் 95 சதவீதமானோர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்பதால் எந்தக்கட்சியும் மருதமுனை மக்களையும் மருதமுனை பிரதேசத்துக்கான அபிவிருத்தி வேலைகளையும் செய்து தரமுன்வருவதில்லை. 

இந்நிலைமையில்தான் மருதமுனை பிரதேச மக்கள் ஒரு ஆதரவற்ற நிலையில் காணப்படுகின்றனர். இவ்வாறுள்ள மக்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் தான் எங்கள் பக்கம் திரும்பி பார்க்கவேண்டும். தற்போது பல இளைஞர்கள் தொழில்வாய்ப்பின்றி காணப்படுகின்றனர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துதர இந்த தலைமை முன்வரவேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -