அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படும் என்ற பேச்சுக்களுக்கே அரசாங்கம் இடமளிக்காது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை ஒரு குடும்பம் ஆளுவதா அல்லது 210 இலட்சம் குடும்பங்கள் ஆளுவதா என்ற சிந்தனையிலேயே, கடந்த ஜனவரி 08ஆம் திகதி பெரும்பாலான மக்கள் வாக்குகளை பயன்படுத்தியதாகவும், அதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்து நல்லாட்சியை ஏற்படுத்தி அதனை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் வார்த்தையையே அரசாங்கம் தடை செய்துள்ளது. தனியார் துறையைவிட முன்னோக்கிச் செல்ல அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும். அரச நிறுவனங்களின் வருமானத்தை 15 வீதத்தினால் உயர்த்தி செலவை 10 வீதத்தினால் குறைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.ச