வருகின்ற 2015ம் ஆண்டுக்கான கெம்பல் பார்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின கூட்டத்தினை எவ்வாறு மேற்கொள்வது சம்பந்தமான ஒன்று கூடல் மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியின் தலைமையில் இன்று அவருடைய பிரதான அரசியல் காரியாலையமாக கருதப்படும் புதுக்கடையில் உள்ள கரியாலையத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறும் கூட்டத்துக்கு மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளராகிய பைரூஸ் ஹாஜியின் தலைமையில் 3000க்கும் அதிகமான மக்கள் புதுக்கடையிலும், மத்திய கொழும்பு சார்பாகவும், அதனோடு மத்திய கொழும்பு மெல்வத்தை பிரதேச பைரூஸ் ஹாஜியின் ஆதரவாளர்கள் சார்பாகவும், மேதின கூட்டத்தில் எவ்வாறு கலந்து கொண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை எவ்வாறு நிலையாகவும் நிரந்தரமாகவும் அமைத்துக் கொள்வது பற்றிய முக்கிய கலந்துறையாடல் இந் நிகழ்வில் இடம்பெற்றதனை முக்கியமாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நடைபெற்ற மெல்வத்தை பிரதேச மக்களுடனான கலந்துரையாடலின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.(ந)
பைரூஸ் ஹாஜியின் தலைமையில் மேதின கலந்துரையாடல் வீடியோ இணைப்பு: