தொழு நோய்க்கட்டுப்பாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு!

அபூ இன்ஷாப்-

தொழு நோய்க்கட்டுப்பாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.சலாஹூதீன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (30) நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இங்கு உரையாற்றுகையில் கல்முனைப் பிராந்தியத்தில் 2014ம் ஆண்டு கணக்கின் படி மொத்த சனத்தொகை 404444 ஆகும்.

இப் பிராந்தியத்தில் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் காணப்படுகின்றன இதன்பிரகாரம் இப் பிராந்தியத்தில் 2015ம் ஆண்டு வரைக்கும் 81 தொழு நோயாளர்கள் இனங்கானப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

கண்டபிடிக்கப்பட்ட அதாவது இனங்காணப்பட்ட தொழு நோயாளர்களில் அதிகமானவர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படுகின்றனர் இது இப்பிராந்தியத்தில் காணப்படும் மொத்த தொழு நோயாளர்களில் 37.66 வீதமாகும் ஏனைய நோயாளர்கள் கல்முனை தெற்கு,சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர்,பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளி;ல் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

எமது பிராந்தியத்தில் வழமையாக நடாத்தப்பட்டு வருகின்ற கிளினிக்குகளுக்கு மேலதீகமாக 06 நடமாடும் தோல் நோய்க் கிளினிக்குகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றின் போது 464 நோயாளர்களுக்கு தோல் நோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 287 சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் இதுவிடயமாக கருத்து தெரிவிக்கையில் எமது பிராந்தியத்தில் தொழு நோய்க்கான வைத்திய நிபூணர் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாக காணப்படுகின்றது இதுவிடயமாக அமைச்சு மட்டங்களில் தெரியப்படுத்தி விரைவில் ஒரு நிபூணரை எமக்கு நியமிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்ததுடன்.

இந்த நோய் தொடர்பான விளிப்புணர்வூட்டும் விடயத்தில் ஊடகங்களின் பங்கு அளப்பரியதாகும் அந்த வகையிலேதான் இன்று இந்த ஊடக மாநாட்டை விரைவாக ஏற்படுத்தி உங்கள் முன் தெரியப்படுத்துகின்றோம் இந்த நோயை கட்டுப் படுத்தும் விடயத்தில் மக்களுக்கு விளிப்பூட்டல் செய்யும்; தார்மீக பணியினை ஊடகங்கள் செய்து வருகின்றமை காலத்தின் கட்டாயமாகும்.

இந்த நோயானது இலகுவாக தழும்புகள், மற்றும் கட்டிகள் போன்ற வடிவத்தில் வெளிக் கொணரப்பட்டபோதும் இதன் தாக்கம் உடனடியாக இனங்கானமுடியது இதன் தாக்கம் 2-10 ஆண்டுகளின் பின்னர்தான இனங்கானக் கூடிய ஒரு நோயாகும்.

தொழு நோய் என்பது மனிதனில் இருந்து மனிதனுக்கு தொற்றக்கூடிய ஒரு நோயாகும் வேறு எந்த மிருகங்களிலிருந்தும் இது தொற்றாது எனவும் தெரிவிக்கப்பட்டன.

இந்த ஊடக மாநாட்டில் கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.இஸ்ஸதீன், பிராந்திய தொற்று நோய்ப்பிரிவு வைத்திய அதிகாரி சீ.என்.செனரத், பிராந்திய தாய் சேய் மருத்துவ வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பஸால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு 
விளக்கமளிக்கும் ஊடக மாநாடு

பி.எம்.எம்.ஏ.காதர்-

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில்  தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று(30-04-2015) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாய் சேய் நல  வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால், பிராந்திய சுகாதார சேவைகள்  பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன்,பிராந்திய நோய் தடுப்பு வைத்திய  அதிகாரி டாக்டர் சி.என்.செனரத் ஆகியோர் தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிப்பதையும் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம்.ச





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -