சோபித்த தேரர் தலைமையிலான சத்தியாக்கிரகம் நிறைவு!

19ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை அடுத்து மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரம் நிறைவுக்கு வந்துள்ளது. 

19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல அமைப்புக்கள் இணைந்து இன்று காலை ராஜகிரியவில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்தனர். 

பொரளை கோட்டே வீதி என்.எம்.பெரேராவின் உருவச் சிலைக்கு அருகில் ஆரம்பமான பேரணி கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை சென்று அங்கு சத்தியாக்கிரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -