முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயகா ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் நிர்வாகத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய பணிப்புரைகளுக்கு அமைய லஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பட வில்லை என்று தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்;திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் நிர்வாகத்தில் துறைமுகத்தில் கப்பல்களுக்கு எண்ணை வழங்கும் பிரிவு, 10 ஏக்கர் நிலத்தை தான்தோன்றித்தனமாக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் உயிர் நீதிமன்றம் வழங்கிய பணிப்புரைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தபட வில்லை என்று தெரிவித்தே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ச