நிஸ்மி கபூர்-
அம்பாரை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த விஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு மற்றும் கலை, கலாசார நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (25) அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய அதாஉல்லா ஆர்ட் கலரியில் நடைபெற்து.
ஏனைய மாணவர்களைப் போன்று விஷேட தேவையுடைய மாணவர்களினதும் இணைப் பாடவிதான செயற்பாடுகளையும், ஆக்கத் திறன் விருத்தியினையும் மேம்படுத்தும் நோக்கிலும் ஏற்பாடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்பாரை மாவட்ட விஷேட தேவையுடையோர் வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வு விஷேட தேவையுடையோர் வலையமைப்பின் நிருவாகத்துறைத் தலைவரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எஸ்.எம்.எம்.உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வித் திணைக் களத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக விஷேட தேவையுடையோர் வலையமைப்பின் உப தலைவரும், உள நல வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜே.நௌபல், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எஸ்.அஹமட் கியாஸ், ஏ.எச்.பௌஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் உட்பட கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பிரதம அதிதி உட்பட கலந்து கொண்ட அதிதிகள் பரிசுகளை வழங்கியதோடு, விஷேட தேவையுடையோர்களின் ஆசிரியைகளுக்கும் விஷேட பரிசுகளை வழங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, முதலிய பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விஷேட தேவையுடைய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.(ந)