பைரூஸ் ஹாஜியின் தலைமையில் பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் படையெடுப்பு-வீடியோ!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
நாட்டிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காகவும், தேர்தல் முறை மாற்றத்தினை அமுல்படுத்துவதற்காகவும் நேற்று திங்கட்கிழமை (27.04.2015) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினை காட்டுவதினை தவிர்த்து நாட்டில் அமைதியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியினை நிலை நாட்டும் பொருட்டு சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துளைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளை வேண்டி மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உருப்பினறுமான பைருஸ் ஹாஜியின் தலைமையில் 5000க்கும் அதிகமான பைரூஸ் ஹாஜியின் ஆதரவாளர்கள் பொறளை சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்தனர்.

இந் நிகழ்வில் மேலும் பைரூஸ் ஹாஜியின் வேண்டுகோளினை பலப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபை உருப்பினர்கள், பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் மாகான சபை உருப்பினர்கள் அரசியல் முக்கியஸ்தர்கள், வர்த்தகர்கள், என பல முக்கியஸ்தர்கள் வெற்றிகரமாக ஊர்வளம் நடைபெற்று முடிவதற்கு பைரூஸ் ஹாஜிக்கு ஒத்துளைப்பு வழங்கியமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

இந்த மக்கள் பேரணியானது முழு கொழும்பு மாவட்டத்திலிருந்து அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பைரூஸ் ஹாஜி;

பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற 225 உருப்பினர்களும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். கட்டாயமாக அவர்கள் அனைவரும் ஆதரவு வழங்கியே ஆக வேண்டும். 

தனி மனிதனுக்கிருக்கின்ற அதிகாரத்தை இல்லாமல் செய்து அதிகாரத்தினை பாராளுமன்றதுக்கு கொடுக்குமாறு வேண்டியே நாங்கள் இங்கு மக்கள் பலத்துடன் வேண்டி நிற்கின்றோம். ஆனால் எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் படுத்துறங்கியதைப் போன்று தங்களது எதிர்ப்பினை காட்டுவார்களாயின் இரவோடிரவாக பாராளுமன்றத்தை களைத்து பொதுத் தேர்தல் ஒன்றினை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் வேண்டிக் கொள்கின்றோம். 

அதற்கு மேல் எமது பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதுள்ளது. ஏனென்றால் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் நூற்றுக்கு அறுபது தொடக்கம் எழுபது வீதமானவர்கள் கல்வர்களாகவும், இந்த நாடு சகல விதமான அபிவிருத்தியிலும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முக்கிய காரணமானக இருந்தவர்களாகவே காணப்படுகின்றனர். 

ஆகவே இவர்களுக்கு இனியும் இடமளிக்காது பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி உடனடியாக பொதுத்தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு பொதுமக்கள் சார்பாக அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றேன்.




வீடியோ மக்கள் படையெடுப்பும், பைரூஸ் ஹாஜியின் 
ஊடகங்களுக்கான கருத்தும்:- 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -