மருதமுனை ஹியூமன் லின்ங் நிறுவனத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டத் திறப்பு விழா!

பி.எம்.எம்.ஏ.காதர்-

கிழக்கு  மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை ஹியூமன் லின்ங் நிறுவனத்தில் நிர்மானிக்கப் பட்ட புதிய கட்டத் திறப்பு விழா கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.குணநாதன் தலைமையில் சனிக்கிழமை (25-04-2015) மருதமுனையில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர அபிவிருத்தி மற்றும்  தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்,பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசல் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுpறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீpன்,ஏ.எல்.தவம்,ஏ.எல்.எம்.நஸீர்,அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் மௌலவி ஹனிபா தலைவர் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றக்கீப், ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி ஆகியோருடன் ஹியுமன் லன்ங் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் பணிப்பாளர் சபை உறுப்பினர் பெற்றோர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைசச்ர் றஊப் ஹக்கீம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து கட்டிடத்தைத் திறந்து வைத்தார். மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மருத நியூஸ் சார்பாக அதன் ஆலோசகர்  எம்.எம்.எம்.முபீன்,பணிப்பாளர் ஏ.ஆர்.நபாயிஸ் ஏ.ஆர்.ஏ.சத்தார்  ஆகியோர் ஹியூமன் லின்ங் நிறுவனத்தின் பணிப்பாளரிடம் நீர் சுத்திகரிப்பு டாங்கியொன்றை அன்பளிப்புச் செய்தனர்.  

பிறை எப்.எம்.அறிப்பாளர் ஏ.எல்.எம்.சினாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -