ஏ.எல்.றமீஸ்-
எமது பிரதேச பாடசாலைகளில் அடிக்கடி இடம் பெரும் நிகழ்வுகளுக்கு அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரை அதிதிகளாக அழைக்கப்படுகின்றனர். அழைக்கப்பட்ட அதிதிகளை வரவேற்பதற்காக வீதிகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.
மேலும் குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை நடாத்தி முடிக்க முடியாமல் ஒரு நாள் பொழுதை இந் நிகழ்வில் கழிக்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பேச்சாளராக வருபவர்கள் நிகழ்வுக்கும் பேச்சுக்கும் சம்மந்தமில்லாமல் பல மணித்தியாலங்கள் உரையாற்றுகின்றனர். இதன் காரணமாக மாணவர்களும், பெற்றோர்களும் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். இது போதாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்ளும் ஒரு சிலர் உரைகளை விமர்சனம் செய்து நிகழ்வின் பாதி நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
பாடசாலையின் நிகழ்வில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். உரிய நேரத்துக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் நிகழ்வை தவிர்த்துக் கொள்ளுங்கள் அதைவிட்டு ஏன் மற்றவர்களின் நேரத்தை வீன் அடிக்கிறீர்கள்.
நிகழ்வில் ஒரு அதிதி உரையாற்றும் போது அதிதியாக வந்த நீங்களே அந்த உரையை மதிக்காமல் பத்திரிகை மற்றும் தமது தனிப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்துவது எவ்வளவு தூரம் நாகரிகம் என்று எனக்கு தெரியாது.
நிகழ்ச்சிகளை ஒழுங்காக திட்டமிடத் தெரியாதவர்கள் அதற்கு ஆசைப்படத் தேவையில்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது.