சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சம்பியனானது நியு ஸ்டார் கழகம்!

சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 5 கழகங்கள் பங்குபற்றிய லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் கழகம் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கி சம்பியனானது.

சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி. முஹாஜிரீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பாலமுனை ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்ட நிகழ்வில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் மற்றும் மார்க்ஸ் மேன் அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடின.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் மார்க்ஸ்மேன் அணியின் தலைவர் ஏ.எம். றிசாட், பொறியியலாளர் எம்.எச். நௌஸாத், சுப்பர் ஓக்கிட் கழகத்தின் முகாமையாளர் எஸ்.எச். முர்ஸித், அணித் தலைவர் எம்.எச்.நிஸார்தீன், பொருளாளர் ஏ.எம். அதுஹான் ஆகியோர் உட்பட நிருவாக உறுப்பினர்களும் கலந்த கொண்டனர்.

இறுதியாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மார்க்ஸ்மேன் நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் அணி 65 ஓட்டங்களைப் பெற்றதுடன் 66 என்ற வெற்றி இலக்கை எதிர்த்தாடிய நியு ஸ்டார் அணியினர் அவ்விலக்கை அடைந்து வெற்றிபெற்றதுடன் சுற்றுப்போட்டியின் சம்பியனாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். இதில் போட்டியின் சிறப்பாட்டக்காரர், தொடர் ஆட்ட நாயகன், சிறந்த பந்த வீசாளர், அதிகூடிய சிக்ஸர்கள் பெற்றவர்கள் போன்றோரக்கு கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -