தெற்கு ஹாலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆந்தைகள் மனிதர்களின் தலை மீது வந்து அமர்கின்றன.
2.7 கிலோ எடை கொண்ட ஐரோப்பிய ஆந்தை மரங்களிலோ, வேலிகளிலோ வந்து அமர்வதில்லை. நடந்துகொண்டிருக்கிற மனிதர்கள், நின்றுகொண்டிருக்கிற மனிதர்களின் தலையை நோக்கிக் குறிவைத்து அமர்கிறது.
ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பறந்து செல்கிறது. ஆந்தை தலையில் வந்து அமர்வதை அங்குள்ள மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை.தலையைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். ஆந்தை கிளம்பிய பிறகு நகர்கிறார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஏராளமானவர்கள் வருகிறார்கள்.
ஆந்தைகளின் இந்தச் செயல் மூலம் தங்களுடைய கிராமம் பிரபலமடைந்து வருவதாக அங்குள்ளவர்கள் பெருமைப்படுகிறார்கள். கேமராவைப் பார்த்துவிட்டால் இன்னும் உற்சாகமாகி, தலையில் அமர்ந்தபடி நன்றாகக் காட்சி தருகின்றன ஆந்தைகள்.