ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் சர்வதேச வீதி பாதுகாப்பு வாரத்தை பிரகடனம் செய்தது!

ஜுனைட்.எம்.பஹ்த்-
மூன்றாவது தடவையாகவும் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச வீதி பாதுகாப்பு வாரத்தை பிரகடனம் செய்துள்ளது.“சர்வதேச சிறுவர்களுக்கான வீதி பாதுகாப்பு வாரம்” எனும் தொனிப்பொருளில் மே மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை சர்வதேச வீதி பாதுகாப்பு வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

சர்வதேச ரீதியில் இடம்பெறுகின்ற வாகன விபத்துக்களில் நாளாந்தம் சுமார்
500 சிறுவர்கள் உயிரிழக்கின்றமை தெரியவந்துள்ளது.

இலங்கையிலும் வாகன விபத்துக்களில் நாளாந்தம் ஒரு சிறுவரேனும் உயிரிழப்பதாக பொலிஸ் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்களில் உயிரிழக்கும் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைத்து இலங்கை மக்களுக்கு பாதுகாப்பான வீதி கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை முன்னெடுக்கவுள்ளது. 

இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -