பொத்துவிலில் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழு!

சம்சுல் ஹுதா-
 பொத்துவில் குடாக்களி கரைவலை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை(23) அங்கு விஜயமொன்றினை மேற்கொண்ருந்தனர்.

குடாக்களி கரைவலை மீனவர்கள் மிக நீண்டகாலமாக கடலுக்குச் செல்வதற்கான பாதைகள் மற்றும் அவர்களது மீன்பிடி உபகரணங்கள், பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடவசதிகள், மலசல கூட வசதிகள், குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் இன்மையால் தாம் மேற்கொண்டு வந்த பாரியளவு பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது பிரஸ்தாபித்தனர்.

எட்டு கரைவலைகளைக் கொண்டு சுமார் 500 மீனவர்கள் இப்பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களது குடும்பங்களின் ஜீவனோபாயமும் இதனைக் கொண்டே செல்வதாகவும் கூறுகின்றனர்.

இம்மீனவர்கள் சிலருக்கான காணிகளுக்கு உத்தரவு (பேர்மிட்) பத்திரம் இருந்த போதிலும் கடற்கரையோரத்தில் வாடி வீடுகள் மற்றும் மலசல கூடங்கள் அமைப்பதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தடைவித்து வந்தனர்.

மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இந்த நடவடிக்கையின் பயனாக மாகாண சபை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் உரிய இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், கடல் வள பரிசோதகர் மனாசிர் சரிப், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி சமீர பிரேரா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பதுர்கான் ஆசிரியர், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -