சவுதி அரேபியாவில் தொழில் புரியும் சகோதரர்களது கவனத்திற்கு..!!!

சம்மாந்துறை அன்சார்-

தொழில் நிமிர்த்தம் நம் நாட்டு சகோதரர்களில் அதிகமானோர் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றார்கள். இங்கு வசிக்கும் நம் நாட்டு சகோதரர்களின் நிறையப் பேர் அடிக்கடி முகம் கொடுக்கக் கூடிய ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பது கிட்னியில் கல் உண்டாவது, நம் சகோதரர்கள் கூட அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள் “ 

என்ட வயித்துல கல், கிட்னியில கல் நான் ஊருக்குப் போகனும், ஒப்ரேசன் செய்யனும்” என்று.

நமது நாட்டில், ஊரில் இருக்கும் போது இவர்களுக்கு உண்டாகாத கல் வெளிநாட்டில் வந்து தொழில்புரியும் போது மட்டும் ஏன் ஏற்படுகின்றது..??? இதற்குக் காரணம் என்ன...??? ஆம்..!!! இதற்கு முழுக்க முழுக்க காரணம், இவர்கள் இங்கே பாவனைக்காக அதாவது குடிப்பதற்கும் மற்றும் சமைப்பதற்கும் பயண்படுத்தும் தண்ணீர்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சவுதி அரேபியாவில் நம்மவர்களில் அதிகமானோர்,

01. வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் Water Cooler தண்ணீர்
02. பலேதியா தண்ணீர் (Municipality Water) 
03. பாக்கிஸ்தானியர்கள், பங்களாதேஷ்காரவர்கள் வீதி ஓரங்களில் வாகணத்தில் விற்றுக் கொண்டிருக்கும் தண்ணீர்.

போன்றவற்றையே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் அதிகம் பயண்படுத்துகின்றார்கள்.

சவுதி அரேபியாவில் சில வீதிகளில், பள்ளிவாசல்களில், சந்திகளில், இன்னும் மக்கள் அதிகமாக புழங்கும் இடங்களிலும் படத்தில் உள்ளது போன்று Water Cooler வைத்திருப்பார்கள். இவ்வாறான வோட்டர் கூலர்களில் இருந்து நம் சகோதரர்கள் தண்ணீரைப் பெற்று அதனை குடிப்பதற்கும் மற்றும் சமைப்பதற்கும் பயண்படுத்துவதனால்த்தான் அவர்கள் கிட்னியில் கல், வயிற்றில் கல் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான வோட்டர் கூலரில் இருந்து தண்ணீரைப் பெற்று அதனை நாம் பயண்படுத்துவதனை முற்றாக தவிர்க்க வேண்டும் காரணம் இவ்வாறான Water Cooler களில் இருக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை இருக்கின்றது, அந்தத் தண்ணீரை நாம் குடிப்பதற்கு பயண்படுத்தும் போது அதில் இருக்கும் உப்புத் தன்மைதான் கற்களாக மாறி நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் வீதி ஓரங்களில் Water Cooler களைக் கண்டால் அந்த Water Cooler ரில் இருக்கும் டெப்பினை நன்றாக அவதானித்துப் பாருங்கள் அந்த டெப்பின் வாயில் உப்புக்கள் உறைந்து ஒட்டிக் கொண்டிருப்பதனை நீங்கள் அவதானிக்கலாம் அதே உப்புத்தான் உங்கள் வயிற்றிலும் சென்று படிந்து உறைகின்றது.

மேலும் சவுதி அரேபியாவில், சில பாக்கிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷ்காரவர்கள் வீதி ஓரங்களில் வாகனம் ஒன்றில் கலன்களில் நீரை விற்றுக் கொண்டிருப்பார்கள், இவர்களிடமும் நம் சகோதரர்களில் பல பேர் தண்ணீர் வாங்கி அதனை சமைப்பதற்கும் குடிப்பதற்கும் பயண்படுத்துகின்றார்கள். அவர்கள் விற்கும் இவ்வாறான தண்ணீரிலும் உப்புத்தன்மை உள்ளது, அவர்கள் விற்கும் தண்ணீர் ஆரோக்கியமானதும் கிடையாது. அவர்கள் விற்கும் தண்ணீரில் உள்ள உவர்ப்புத் தன்மை எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.



மேலும் நமது சகோதரர்களில் சில பேர் சோறு சமைக்கும் போது சோற்றை வடித்து சமைப்பார்கள் சவுதி அரேபியாவில் உள்ளவர்கள் இது பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். சோற்றை வடித்தல் என்பது பானையில் அரிசியை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி பின்னர் சோறு பதமாக ஆன பின்னர் அந்தத் தண்ணீரை வடித்து வெளியில் ஊற்றி விடுவார்கள், இவ்வாறு சோற்றை வடித்து சமைக்கும் போது இவர்கள் பலேதியா தண்ணீரைப் பயண்படுத்துகின்றார்கள், பலேதியா தண்ணீர் என்பது Municipality யினால் வழங்கப்படுகின்ற தண்ணீராகும். இது குளிப்பதற்கும் மற்றும் துணிமணிகளை துவைப்பதற்கும் பயண்படுத்தப்படும் தண்ணீராகும் இது பொதுவாக எல்லா வீடுகளுக்கும் அதே போன்று நம்மவர்கள் தங்கும் இருப்பிடங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும்.

இந்தத் தண்ணீரிலும் உப்புத்தன்மை உள்ளது மட்டுமல்லாது இவ்வாறான தண்ணீரை எவ்வகையிலும் குடிப்பதற்கோ அல்லது சமைப்பதற்கோ நிச்சயமாக பயண்படுத்தக் கூடாது இது நம் உடலுக்கு பாதிப்பையே உண்டு பண்னும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆவவே சகோதரர்களே..!!! நீங்கள் இங்கே குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கடைகளில் 5 றியால்களுக்கு விற்கப்படும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற கலன்களில் உள்ள தண்ணீரை வாங்கி பயண்படுத்துங்கள் மாறாக மேற்கூறப்பட்ட வகைகளில் தண்ணீரை பெற்று நீங்கள் பயண்படுத்துவதனை தயவு செய்து முற்றாக தவிர்த்து விடுங்கள். இது சவுதி அரேபியாவில் வாழும் சகோதரர்களுக்கு மாத்திரமல்ல ஏனைய வளைகுடா நாடுகளில் வாழும் சகோதரர்களுக்கும் பொருந்தும்.


நாம் இங்கே எமது பொருளாதாரத்தை மேம்படுத்தவே வந்திருக்கின்றோம் மாறாக எமது நோய்நொடிகளை மேம்படுத்த அல்ல என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -