எம்.வை.அமீர் -
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் இரண்டாம் பிரிவு இருபது வீட்டுத்திட்டத்தில் மஸ்ஜிதுல் சாலிஹீன் எனும் பெயரில் இருந்த பழைய பள்ளிவாசலுக்கு பதிலாக சுமார் இருபது இலட்சங்களுக்கு மேற்பட்ட நிதியைக் கொண்டு புதிய பள்ளிவாசல் ஒன்று கட்டி முடித்து 2015-04-28 ல் இன்று திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை செந்நெல் கிராமம் இரண்டாம் பிரிவு இருபது வீட்டுத்திட்டத்தில் மிகுந்த குறையாக இருந்த மஸ்ஜிதுல் சாலிஹீன் பள்ளிவாசலை அமைத்துத்தர முன்வருமாறு குறித்த பிரதேச மக்கள் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களை வேண்டியிருந்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் முன்னாள் பிரதி அமைச்சரும் பாராளமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிபுல்லாஹ் அவர்களுடன் இணைந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் தனவந்தர் ஹசன் அஹமட் ஹசன் முஹம்மட் அவர்களிடம் விடுத்த வேண்டுதலைத் தொடர்ந்து குறித்த பள்ளிவாசலைக் கட்டித்தர முன்வந்திருந்தார்.
ஹசன் அஹமட் ஹசன் முஹம்மட் அவர்களது மாமியாரின் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட மஸ்ஜிதுல் சாலிஹீன் பள்ளிவாசலை, ஹசன் அஹமட் ஹசன் முஹம்மட் அவர்களும் முஹம்மட் அஹமட் முஹம்மட் இஸ்பா அல் பலசி அவர்களும் கலந்து திறந்து வைத்தனர்.
நிகழ்வுக்கு முன்னாள் பிரதி அமைச்சரும் பாராளமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிபுல்லாஹ் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களும் விசேட அதிதியாக கலந்து கொடிருன்தனர்.
நிகழ்வுக்கு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பிரதம தலைவர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா அவர்கள் தலைமைவகித்தார். அதேவேளை சம்மாந்துறை ஜம்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.அப்துல் காதர் மௌலவி, ஜம்யத்துல் உலமா சபையின் உப தலைவர் யூ.எல்.மஹ்றுப் மௌலவி மற்றும் கலாநிதி இசட்.ஏ.வஸீர் உட்பட சமூகத்தலைவர்களும் குறித்த பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.