மொஹிடீன் பாவா-
வடக்கில் மிகவும் மும்முரமான முறையில் பல செயல் திட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன ஆனால் கிழக்கில் பல திட்டங்கள் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டும் அவைகள் கூட்டம் சேர்வதுடனும் மற்றும் பல குழுக்கள் அமைப்பதுடனும் மட்டும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன.
செயல் திறன்யின்மை முறையான திட்டம்மிடலின்மை என்ற கோளாறுகளால் சமூகத்தின் தேவைப் பாடுகள் இழுத்தடிக்கப் படுகின்றன .
இவ்வாறான தற்போது ஆட்சியில் பங்கு கொண்டு பாரிய அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, பூமாலைகள் சகிதம் உலாவரும் செயல் திறன் அற்றுக் கிடக்கும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் நமக்குத் தேவைதானா ? கிழக்கு வெளிக்க வேண்டும் என்றால் ஆற்றல் மிகு கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே வெளிக்க வைக்க முடியும், மக்களுக்கு இதை நான் உணர்த்தத் தேவையில்லை என்றே நினக்கிறேன்.(ந)