மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் இயங்கும் ஹிக்மா பட்டப்படிப்பு நிலையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிவாரிப்பட்டப்படிப்புக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் பிரச்சனைகளை கேட்டறியும் கூட்டம் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் நேற்று இடம்பெற்றது.
நிலையத்தின் தலைவர் எம்.எல்.எம்.அஸ்றப் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பினை மேற்கொள்ள மாணவர்களிடம் 3 வருட கல்விக்காக 128000 ரூபா அறவீடு இடம்பெறுவதாகவும்.
குறிப்பிட்ட குழுவினர் அதனைச் செலுத்தி கற்கும் நிலமையில்லாது இன்று பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களால் இத்தொகையினைச் செலுத்த முடியாமல் உள்ளதாகவும் எடுத்துக்கூறினர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் குறிப்பிட்ட தொகையில் மாற்றத்தைக் கொண்டுவர பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் உறியளித்தார்.