உரிமைகளை வென்றெடுக்க கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் -அமைச்சர் துரைராஜசிங்கம்




குகதர்ஷன் -
நாம் உரிமை உரிமை என்று கூறுகின்றோம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால் எமது கடமையை நாம் சரிவரச் செய்ய வேண்டும். அதற்கு எமது உழைப்பினை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண அமைச்சருடனான திருகோணமலை இலங்கைத் துறைமுக முகத்துவாரம் மற்றும் அதனை அண்மிய பிரதேச மீனவ, விவசாய சங்கங்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

நாம் யார் என்பதை முதலில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் மிகப்பெரிய தியாகத்தைச் செய்தவர்களின் சொந்தக்காரர்கள். அந்தளவு துணிவு தைரியத்துடன் இருந்தவர்கள் நாம் ஆனால் தற்போது கவலைப்பட்டு நிற்கின்றோம். இந்த நிலை மாற்ற வேண்டும்.

நாம் விசாயிகள் என்று சொல்வதில் பெருமைப்பட வேண்டும். விவசாயத்திற்கு பெரிய காணிகள் தேவை என்பது கிடையாது சிறிய இடத்தினுள்ளேயே அதனை மேற்கொள்ளலாம் விவசாயத்திற்காக இயற்கையுடன் போராடுபவனே மனிதன். மிகவும் துயரத்தின் மத்தியில் வாழ்கின்ற நாம் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

நாம் உரிமை உரிமை என்று கூறுகின்றோம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால் எமது கடமையை நாம் சரிவரச் செய்ய வேண்டும். அதற்கு எமது உழைப்பினை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு உத்வேகத்துடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

எமது ஒற்றுமையின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினாலேயே எம்மால் சற்று சுதந்திரமாக பேசும் உரிமையும் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. மத்திய மாகாண அரசுகளிடம் துணிந்து கதைக்க முடிகின்றது.

எமது உரிமை என்கின்ற விதத்தில் அதனைப் பெறுவதற்காகத்தான் நாம் எமது நவடிக்கைகளை முன்நகர்த்திச் செல்லுகின்றோம். ஒரு நாளில் நாம் இட்ட புள்ளடி தான் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் போராட்டமும் இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தை மாற்றியிருக்கின்றது. இந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். எமது புள்ளடி எமது உரிமை.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எம் அனைவராலும் விடப்பட்ட தவறுதான் தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்பும் முஸ்லீம் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைத்திருக்கின்றோம். இப்போது எமது கையில் கயிற்றின் நுனி தரப்பட்டிருக்கின்றது இனி அதனை இழுத்து எடுக்க வேண்டும். எம்மால் முடிந்தவரை இழுப்போம்.

இனிவரும் காலங்களில் நாம் முக்கிய தேர்தலினை சந்திக்க இருக்கின்றோம் அதில் எமது சுயமரியாதை சுயநிர்ணயம் எமது இனம் என்கின்ற ஓர்மத்தோடு செயற்பட வேண்டும். என்று தெரிவித்தார்.

இலங்கைத் துறைமுக முகத்துவார மீனவர் சங்க கட்டிடத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சேருவில தொகுதிக்கிளைத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.நாகேந்திரன், எஸ்.ஜனார்த்தனன், அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன், மீன்பிடித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், அதிகாரிகள் ஆகியோருடன், சங்கங்களின் உறுப்பினர்கள், மாதர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஊர்ப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதேச மீனவர்களினால் முக்கிய பிரச்சினையாக தடைசெய்யப்பட்டுள்ள சிறு மீன்பிடி முறையான தொட்டாணி முறையினை தடை நீக்கம் செய்து தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், நாதண்டஓடை அணைக்கட்டு உடைந்துள்ளமை சம்மந்தமாகவும், புண்ணையடி கல்லடி துறைகள் சம்மந்தமாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமை, கடற்படையின் ஆக்கிரமிப்புக்குள் இன்னமும் இருக்கும் தனியார் காணிகள், மக்களிடம் இருக்கின்ற காணிகளுக்கு இன்னும் ஒப்பந்தம் வழங்கப்படாமை, கடற்பாய்ச்சல் காரர்களினால் உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை, பிரதேச ஆலயங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன் பின்னர் மக்களினால் குறிப்பிட்டு சுட்டிக் காட்டப்பட்ட இலங்கைத் துறைமுக முகத்துவாரம், புண்ணையடி, கல்லடி துறைகள் ஆகியவற்றை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -