பாடசாலை வைபவங்களில் தான் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுப்பு -கல்விப்பணிப்பாளர் நிஸாம்

ஏ.எம்.றிகாஸ்-
பாடசாலைகளில் நடைபெறும் வைபவங்களில் தான் கலந்து கொள்வதற்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அடிக்கடி தனக்கு அனுமதிவழங்க மறுப்புத் தெரிவிப்பதாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம். நிஸாம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தினால் நடாத்தப்பட்ட வலயமட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் அனுப்பப்பட்டிருந்த வாழ்த்துச் செய்தியில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - 

யுத்த காலம் தொடக்கம் இன்றுவரை சொல்லொணாத்துயரங்களை அனுபவித்துவரும் மட்டக்களப்பு மேற்கு வலய பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஆகியோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்வாகவும், பின்தங்கிய பிரதேசமாக இருந்தாலும் அங்கு வாழும் மாணவர்கள் பல்வேறு ஆற்றல்களை தன்னகத்தே கொண்டுள்ளனர் என்பதை பறைசாற்றும் அரங்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் நான் கலந்து கொள்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் தராமையினால் இவ்வரலாற்று முக்கியத்துவம் மிக்க வைபவத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாமற் போனதையிட்டு நான் கவலையடைகிறேன்.

இது கௌரவ கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் நிகழ்வு என்று குறிப்பிட்டிருந்தும் எனக்கு அனுமதி வழங்கப்படாமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான வைபவங்கள் மாலைகளும் மரியாதையும் பெறுவதற்கான மன்றங்கள் அல்ல. மாறாக மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் என கல்வியோடு தொடர்புடைய அனைவரும் ஒன்று சேரும் பொது மன்றமாகும். கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தக்களை வெளியிட இதைவிடச் சிறந்த இடம் கிடைக்கப்போவதுமில்லை, அவ்வாறான வாய்ப்புக்கள் அடிக்கடி வரப்போவதுமில்லை என்ற உண்மையை கல்வியைத் தொழிலாக கொண்டிருப்பவர்கள் உணர இறைவனைப் பிரார்த்திக்கமாறு வேண்டுகின்றேன்.

நல்லாட்சி கல்வியிலும் மலர வாழ்த்துகின்றேன் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -