அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கல்லூரியில் தேசிய உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு!

நிஸ்மி-
தேசிய உணவுப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.பாஸிலா அவர்களின் ஆலோசனையின் கீழ் பொது சுகாதார பரிசோதகர் ஏ.எச்.பௌமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கான தொற்றா நோய் சம்பந்தமான பரிசோதனையும், அது பற்றி விளக்கமளிக்கும் நிகழ்வும் மற்றும் உயர்வகுப்பு மாணவர்களுக்கான போஷாக்குணவு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும் முனவ்வறா ஜுனியர் கல்லூரியில் அதிபர் ஏ.ஜி.அன்வர் தலைமையில் இன்று (28) செவ்வாய் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர் எஸ்.எம்.அஸீஸ் மற்றும் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் எம்.இராஜேந்திர மூர்த்தி, ஏ.எச்.பௌமி ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் மாணவர்களுக்கும் தேவையான விளக்கங்களை வழங்கினார்கள் கொலஸ்ட்ரோல, சீனி மற்றும் இரத்த அமுப்பம் சம்பந்தமான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு தேவையான ஆலோசனகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் திட்டமிடல் பிரிவு செயற்றிட்ட உத்தியோகத்தர் ஐ.எல்.மக்ஜுத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.ஹிதாயத்துல்லா, குடும்ப நல மருத்துவ தாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -