டெல்லியை இலகுவாக வென்றது பெங்களூர்!

.பி.எல். போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. 

இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அதன்படி டெல்லி அணி துடுப்பெடுத்தாடத் தொடங்கியது. 

தொடக்க வீரர்களாக அய்யர், அகர்வால் களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே அய்யர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். 

அடுத்து டெல்லி அணியின் தலைவர் டுமினி களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 32 ஓட்டங்களாக இருக்கும்போது டுமினி 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 

அடுத்து வந்த யுவராஜ் சிங் இரண்டு ஓட்டங்களை எடுத்த நிலையில் வருண் ஆரோன் பந்தில் வெளியேறினார். 

அடுத்த பந்தில் மெத்யூஸூம் ஆட்டமிழந்தபோது, டெல்லி அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. 

5-வது விக்கெட்டுக்கு அகர்வால் உடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். அகர்வால் 27 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணி 18.2 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

பெங்களூர் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும், வருண் ஆரோன் 2 விக்கெட்டுக்களையும், வியசே 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன்படி 96 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி சார்பாக கெயிலும் விராட் கோலியும் களமிறங்கினார்கள். 

வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெயில். மறுமுனையில் கோலி நிதானமான ஆடினார். 

பெங்களுர் அணி 10.3 ஒவர்களில் 99 ஓட்டங்களை எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. 

சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட கெயில் 40 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்தார். கோலி 23 பந்துகளில் 35 ஓட்டங்களை எடுத்தார். 

ஆட்டநாயகனாக வருண் ஆரோன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -