ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நாட்டின் நாலாபக்கங்களிலும் பல ஆண்டுகளாக பதில் உப தபால் அதிபர்களாகக் கடமையாற்றிய 654 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு பண்டார நாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் அஞ்சல் அமைச்சின் செயலாளர் எம்.அப்துல் மஜீட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் அஞ்சல் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
அமைச்சர் ஹலீமின் இம்முன்மாதிரியான செயற்பாட்டைப் பாராட்ட வேண்டும். கடந்த காலங்களில் அஞ்சல் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்யாத பெருங் கைங்கரியத்தை இவர் மிகத் தனிச்சலாகச் செய்திருக்கிறார்.
இதன் மூலம் சுமார் 15 வருடங்களுக்கு மேல் பதில் உப அஞ்சல் அதிபர்களாகக் கடமையாற்றிய எத்தனையோ செல்விகளின் தற்கொலைகள் தடுக்கப்படடுள்ளன. அவர்களின் வாழ்வில் புது அர்த்தங்கள் தோன்றியுள்ளன. திருமணத்திற்கான பச்சைக்கோடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
இதற்கான நன்மைகளை அல்லாஹ் அமைச்சர் ஹலீமுக்கு வழங்கவேண்டும். இதுபோன்ற நல்ல சேவைகளைச் செய்வதற்கான வாய்ப்பையும், வளத்தையும் அல்லாஹ் அவருக்கு வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.