காத்தான்குடி பாலமுனை இர்ஷாத் பள்ளிவாயலுக்கான ஒலிபெருக்கி வசதியினை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இன்று 28 காலை வழங்கிவைத்தார்.
கடந்த வாரம் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் செயலாளர் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் விடுத்த கோரியினை ஏற்று இன்று குறிப்பிட்ட பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் ஒலிபெருக்கி வசதியினைப் பெற்றுக் கொடுத்தார்.
குறிப்பிட நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முன்னாள் உறுப்பினரும் நகர அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பாளருமான முபீன் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.