தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சுசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கிர்பி (102) என்பவரும் டோரீன் லக்கி (91) என்பவரும் சில நாட்களாக தங்களுக்குள் காதல் வளர்த்து வந்தனர்.
வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ள இவர்கள், உலகில் மிகவும் வயதான பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் காதல் ஜோடிகள் என்ற சாதனையையும் ஏற்படுத்தவுள்ளனர்.
சுமார் 25 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த ஜார்ஜ் கிர்பியும், டோரீன் லக்கியும் சமீபகாலம் வரை தானுண்டு-தன் வேலையுண்டு என்று ‘லிவ் டு கெதர்’ முறையில் இருந்து வந்துள்ளனர்.
பின்னர், திடீரென அவர்களுக்குள் பூத்த காதல், அவர்களை திருமண பந்தத்தை நோக்கி முன் நகர்த்த தொடங்கியுள்ளது என இருவருக்கும் பொதுவான ஒரு குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், உலகில் மிகவும் வயதான பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் காதல் ஜோடிகள் என கின்னஸ் புத்தகத்தில் இவர்களின் பெயர் இடம்பெறும் என்பது, குறிப்பிடத்தக்கது.(ந)