பொதுமக்களின் தொலைபேசிக்கு பதில் கொடுக்காமல் புறக்கணிக்கும் முதலமைச்சர்.

எஸ்.எம்.அஜுஹான்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவது என்பது மலையில் மாட்டை ஏற்றுவதாகும் என்று பொதுமக்களும் அதிகாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புக்களை எடுத்தால் அவர் அதற்கு பதில் அளிக்காமல் விட்டு விடுகின்றார். கூட்டங்களிலும், அலுவலக வேலைகளில் இருக்கும்போது பதில் அளிப்பது முடியாத காரியம்தான் ஆனால் இவரின் தொலைபேசிக்கு எந்த சந்தர்ப்பத்திலும், எந்த நேரத்திலும் பதில் கிடைப்பதில்லை.

இந்த விடயத்தில் பொதுமக்கள்,அதிகாரிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாக்குகளைப் பெற்று இன்று முதலமைச்சராக இருக்கும் ஹாபிஸ் நஸீர் அஹமட் மக்களை மறந்து பதவி அதிகாரத்தில் திளைத்திருப்பதே தொலைபேசிக்கு பதில் அளிக்காமல் இருப்பதற்கான காரணம் எனச்சொல்லப்படுகின்றது.

கிழக்கு மாகாண முதமைச்சரே உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு இன்னுமா பொதுமக்கள் அழைப்பை எடுக்கப்போகின்றார்கள்? தேர்தல் காலங்களில் எப்படியும் வெல்லலாம் என்ற நினைப்பில் இருக்கின்றீர்களா? மக்கள் கவனமானவர்கள் நாட்காலியை உடைத்துவிடுவார்கள். உடைந்தால் இருப்பதற்கே இடமில்லை. பழைய இடத்தை நாடவேண்டியதுதான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -