எம்.வை.அமீர் -
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுக்கு உயிரூட்டிய மூத்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என சனிமௌட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளரும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளருமான எம்.ஐ.அப்துல் மனாப் தெரிவித்தார்.
எஸ்.எச்.எம்.ஜெமீலின் மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்விமான் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் கல்முனை ஸாஹிராவின் முன்னேற்றத்துக்கும் கல்வி எழுச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்றும் கல்முனை ஸாஹிராவின் அதிபர், இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர், முஸ்லிம் சமய கலாச்சார இராஜங்க அமைச்சின் செயலாளர், கல்வி கலாச்சார அமைச்சின் மேலதிகச் செயலாளர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்ததுடன் கடந்த காலங்களில் தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்து காத்திரமான பங்களிப்பு செய்தவர் என்றும் அவரது இருதிக்காலம்வரை தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பேரவை உறுப்பினராக திகழ்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
அவரது கல்வி மற்றும் பொதுப் பணிகள் எவையும் குறைத்து மதிப்பிட முடியாதவை என்றால் அது மிகையாகாது.
இச்சந்தந்தர்ப்பத்தில் அவரது மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.