சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தல்!

றுமைஸ்-

ம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை மற்றும் சம்மாந்துறை மக்களின் வேண்டுகோளுக்கு அமைய சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துவது சம்பந்தமான உத்தேச அறிக்கை அடங்கிய மகஜர் (திட்ட) ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி, பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரியவை அமைச்சில் நேற்றுமுன்தினம் (29) சந்தித்து கையளித்தார்.

இச்சந்திப்பில் சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தப்பட
வேண்டிய அவசியம் பற்றி விடயங்களை அமைப்பாளர் ஹஸன் அலி, அமைச்சர் கரு ஜயசூரியவிடம் மகஜரை கையளித்து விரிவாக விளக்கிக் கூறினார்.

சம்மாந்துறை பிரதேச சபையாது, 133 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும், 51 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும், சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையையும், 42 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்ட பிரதேசமாகும்.

1947 ஆம் ஆண்டு சம்மாந்துறைப் பட்டின சபையாகவும், 1960 ஆம் ஆண்டு கிராம சபையாகவும், 1988 ஆம் ஆண்டு முதல் பிரதேச சபையாக இயங்கி வருகின்றது.

இச்சபையை நகர சபையாக தரமுயர்த்துவது சம்பந்தமாக முன்னாள் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சரிடம் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, பொது நல அமைப்புக்கள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்தும் செய்துதருவதாக வாக்குறுதியளித்தும்

நிறைவேற்றவில்லை. எனவும் இக்கோரிக்கையின் நியாயங்களை அமைச்சர் கரு ஜயசூரியவிடம் அமைப்பாளர் விளக்கிக் கூறினார்.

இந்த மகஜரை வாசித்து பார்த்த அமைச்சர் கரு ஜயசூரிய சம்மாந்துறை பிரதேச
சபையை நகர சபையாக தரமுயர்த்துவது சம்பந்தமாக புர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் அதற்கான ஆவணத்தில்

கையொழுத்திட்டு அமைச்சின் செயலாளரிடம் கையளித்தாக அமைப்பாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -