கல்வி மற்றும் சமூகப் பணிகளில் முன்னின்று உழைத்தவர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல்-ஜெமீல் MPC

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்வி மற்றும் சமூகப் பணிகளில் முன்னின்று உழைத்து வந்த கல்முனை சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.


கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

எமது சாய்ந்தமருது மண்ணில் பிறந்து கல்முனை சாஹிராக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி- வேறு பல உயர் பதவிகளையும் வகித்த எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் தேசிய, சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட ஒரு அறிஞராக வலம் வந்தமை எமக்கு பெருமையாக இருந்தது.

ஜெமீல் அவர்கள் கல்முனை சாஹிரா கல்லூரியில் அதிபராக பணியாற்றிய காலம் அக்கல்லூரியின் பொற்காலம் எனலாம். அவரது காலத்திலேயே கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய திருப்பம் ஏற்பட்டது என வரலாறு கூறுகின்றது. சாதாரண ஒரு கல்விக் கூடமாக இருந்து வந்த அக்கல்லூரியை தேசிய மட்டத்தில் பிரகாசிக்கச் செய்த பெருமை அவரையே சாரும். இன்று இலங்கையின் நாலா பாகங்களில் இருந்தும் முஸ்லிம் மாணவர்கள் இக்கல்லூரிக்கு வந்து கல்வி கற்பதற்கான அடித்தளத்தை அவரேயிட்டார்.

அதன் பின்னர் கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளராகவும் முஸ்லிம் கலாசார அமைச்சின் செயலாளராகவும் மற்றும் பல உயர் பதவிகளை வகித்துக் கொண்டும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்காக பெரும் தொண்டாற்றி வந்துள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் கூட சமூக சிந்தனையில் மூழ்கியிருந்த அவர் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் தனிப்பட்ட ரீதியிலும் அமைப்பு ரீதியாகவும் கடுமையாக உழைத்து வந்தார்.

அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைகளை தென்கிழக்கு பல்கலைக் கழகம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பல்கலைக் கழகத்தின் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு- சிறப்பான பங்களிப்பை செய்து வந்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தினால் இரண்டாவது முறையாகவும் கவுன்சில் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு பல்வேறு வகையிலும் முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக மேம்பாட்டுக்காக முதிய வயதிலும் ஓய்வில்லாமல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்த எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் பிரிவானது எமது சமூகத்திற்கு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பு எமக்கு பெரும் கவலையை தந்துள்ளது.

என்றாலும் மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்ற வகையில் நாம் அதனை ஏற்றேயாக வேண்டியுள்ளது.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை பரிசாக வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -