நேபாளத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பு - நஸீர் MPC

அபு அலா -
நேபாளத்தில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், உயிர் நீத்த குடும்பங்களின் உறவுகளுக்கும் அம்பாறை மாவட்ட மக்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் இன்று (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூமியதிர்ச்சியில் பல உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேபாளத்திற்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இனமத ரீதியாக இலங்கையும் நேபாளமும் மிகுந்த நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது. இன்று அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை என்றுமே ஈடுசெய்ய முடியாதவையாகும்.

உயிரிழப்பில் ஏற்படுகின்ற வழியும் வேதனையையையும் நாம் நன்றாக அறிவோம். கடந்த 30 வருடகால யுத்தத்திலும் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினாலும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டு அதன்மூலம் உண்டான பாதிப்பு மிகவும் பாரதூரமானது என்பதை கிழக்கு மாகாண மக்களாகிய நாங்கள் அறிவோம். விஷேடமாக அம்பாறை மாவட்ட மக்கள் அறிவார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மேற்கொண்டு வருகின்ற அனைத்து உதவிகளையும் நாம் மனதார பாராட்டுகின்றோம். இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக எமது நாட்டு முப்படை வீரர்கள் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதியையும் பிரதமரையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டியாக வேண்டும்.

எமது வீரர்கள் யுத்தத்திற்கு மட்டுமல்ல உதவி செய்வதிலும் முன் உதாரணமாக திகழ்வதை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்ட அமைய இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

மேலதிக உதவிகள் அல்லது வேறு தேவைகள் ஏற்படும் இடத்து அதற்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவுகளையும் வழங்க அம்பாறை மாவட்ட மக்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கும் இதேவேளை அந்த நாடும், மக்களும் மீண்டும் புத்துயிர் பெற்று வழமையான நிலைமைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய வேண்டும். என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -