பால் புரைக்கேறி 38 நாளேயான குழந்தை பலி!

ட்டக்களப்பு - வாசிகசாலை வீதி - கொம்மாதுரை - செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற 38 நாளேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. 

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றுக் காலை இக் குழந்தை தனது தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும்போது பால் புரைக்கேறியதால் மயக்கமடைந்த குழந்தையை அருகிலுள்ள செங்கலடி வைதியசாலைக்கு கொண்டுசென்ற போது குழந்தை மரணமடைந்துள்ளது. 

இக் குடும்பத்தில் ஏற்கனவே 8 வயதிலும், 4 வயதிலும் இரு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக இப் பெண் குழந்தை கடந்த 15-04-2015 அன்று செங்கலடி வைத்தியசாலையில் சுகப் பிரசவமாக பிறந்துள்ளது. 

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய ஏறாவூர் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை மேற்கொண்டார். 

பிரேதப் பரிசோதனையின் பின்னர் ´தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு புரைக்கேறியதால் சுவாசம் தடைப்பட்டு இதயம் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளது´ என தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -