சிங்கப்பூரில் வசிப்பவர் நந்தகுமார் பாலகிருஷ்ணன் (வயது 34). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
மடிக்கணினி வைக்கும் பை மற்றும் புத்தகங்களில் செல்போன் கேமராக்களை மறைத்து வைத்து பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து வந்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆந்தேதி ஒரு வணிக வளாகத்தில் பெண் ஒருவரை ஆபாச படம் எடுத்தார். இதனை அந்த பெண்ணின் நண்பர் பார்த்து, நந்தகுமார் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் அவரது செல்போனை பரிசோதனை செய்த போது, பல பெண்களை அவர் ஆபாசமாக படம் பிடித்து வைத்து இருப்பது தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனையிட்டபோது அங்குள்ள மடிக்கணினியில் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாத காலத்தில் அவர் 59 பெண்களை ஆபாச படம் எடுத்துள்ளார்.
இதனையடுத்து நந்தகுமார் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட கோர்ட்டில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆதம் நகோடா, அவருக்கு 6 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.(ந)