ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ரோசெல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் தோட்டத் தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த பகுதி தோட்டத்திலுள்ள கோவிலை புனரமைப்பு செய்ய தோட்ட நிர்வாகிகள் இடமளிக்காமையே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காரணம் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
1974ஆம் ஆண்டு இந்தக் கோவிலை நிர்மாணிக்க அப்போதைய நிர்வாகள் அனுமதி அளித்தனர். எனினும் அந்தக் கோவிலை புனரமைக்க தற்போதுள்ளவர்கள் அனுமதியளிக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று காலை இடம்பெற்ற இந்தப் போராட்டத்தால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.(ந)