அட்டாளைச்சேனைக்கு வழங்கிய நியமனம் ஏற்க முடியாது கட்சியில் இருந்து விலகுகிறேன் -றியாஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஆலோசகரும், வன்னி மாவட்ட செயற்பாட்டாளரும்,பிரதேச சபை வேட்பாளருமான எம்.ஏ.சி.ஏ.றியாஸ் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து தான் விலகிக் கொள்ளும் முடிவினை தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கும், செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் அறிவித்துள்ளதாகவும் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

தற்போது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்ற தொழில்வாய்ப்புக்களில் அட்டாளைச்சேனை பிர தேசத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதுடன், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவராக இல்லாத நிவையிலும், கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்கள் பலர் தொழில் வாய்ப்புக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனையில் 12க்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கும் நீர்வழங்கள் சபை நியமனம் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
அதேபோன்று அட்டாளைச்சேனையில் இரண்டு மத்திய குழுக்கள் உள்ளன  மற்றய குழுவுக்கு 6 பேரையாவது வழங்கியிருக்கலாம் அதுவும் நடக்க வில்லை.

கட்சியின் வளரச்சிக்காக அன்றும், இன்றும் பல பங்களிப்புக்களைச் செய்த நமது போராளிகள் புறக்கணிக்கப்பட்டு தங்களது சுயநலத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காக மாற்றுக் கட்சியின் பலருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த செயற்பாடுகளை கட்சியின் உண்மையான செயற்பாட்டாளன் என்ற வகையில் அங்கீகரிக்க முடியாது.

அதேபோன்றுதான் மூன்று மாவட்டஙகளை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்திற்கு ஐந்தே ஐந்து பேருக்குத்தான் நியமனம் வழங்க தலைவர் ஹக்கீம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு தொழில் வழங்க வேண்டிய ஒரு நிலையில் வெறும் ஐந்து பேருக்கு வழங்கும் நடவடிக்கை என்பது அந்த மக்களை முஸ்லிம் காங்கிரஸ் அடிமைகள் என்ற பார்க்கின்றது என எண்ணந்தோன்றுகின்றது.
வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளிகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அதிகார வேட்கையில் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் ஐந்து பேருக்கு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது கவலைக்குரிய நடவடிக்கையாகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.

வன்னி மாவட்டத்தில் சமூக ரீதியான எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது இந்தப்பிரச்சினைகளில்கூட கட்சியின் தலைவர் ஈடுபாடு காட்டுவதில்லை. எந்தப்பிரச்சினையைக் கூறினாலும் பாரப்போம் என்கின்ற வார்த்தையைத் தவிர வேறு எதனையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்காமல் இழுத்தடித்து மாற்றுகட்சிக்காறர்களையும், அவர்களுக்கு சார்பானவர்களையும் முன் நகர்த்தி தொழில் வழங்கும் செயற்பாடானது ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் கட்சியில் இருந்து விலகும் முடிவினை எடுத்துள்ளேன். இது தொடர்பில் கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பை இன்னும் சில தினங்களில் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.LFN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -