மஹிந்தவின் ஆட்சி நிலைத்திருந்தால் இலங்கையும் பர்மாவாகவே மாறியிருக்கும்-பைரூஸ் ஹாஜி

அஹமட் இர்ஷாட்-
ன்று அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை திட்டமிட்டு அழித்து வருக்கின்ற பர்மா நாடானது சென்ற வருடம் அந்த நாட்டில் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் இருந்த கடும்போக்கு சிந்தனையுள்ள பெளத்த மதகுரு தலைவரை எமது நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பொதுபலசேனாவின் விடாப்பிடியின் காரணமாக கொழும்புக்கு அழைத்து வந்து பல ஆயிரக்கணக்கான பெளத்த துறவிகளை ஒன்று திரட்டி எமது நாட்டு முஸ்லிம்களின் அபிலாசைகளை புறந்தள்ளியவர்களாக பெரும் மாநாடு ஒன்றினை நாடாத்தியது.

மறுபக்கத்தில் பேருவளை தர்க்காடவுனில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளினால் நொந்து போன இந்த நாட்டு முஸ்லிம்களின் துவாக்களை அங்கீகரித்த அல்லாஹ் இரண்டு வருடங்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்யும் அதிகாரம் இருக்கையில் தேர்தல் ஒன்றினை உடநடியாக நடாத்தும் திட்டத்தினை மஹிந்தவின் மதில் உருவக்கச் செய்து மஹிந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பிவைத்தான் அல்ஹம்துலில்லாஹ். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ்ஸ வெற்றிபெற்றிருந்தால் இன்று எமது நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலைமையானது பர்மா நாட்டு முஸ்லிம் சகோதரர்களின் நிலைமையினை விடவும் படுபாதாளதுக்கு சென்றிருக்கும் என்பதில் என்னிடம் எந்த மாற்றுக்கருத்துமில்லை என மேல்மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பைரூஸ் ஹாஜி……

இன்று திட்டமிட்டு பர்மாவில் முஸ்லிம்களை கொலை செய்து இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு வரும் அந்த நாட்டு அரசாங்கத்தினதும் கடும்போக்கு பெளத்த மதத்தலைவர்களினதும் சிந்தனையானது இலங்கையிலும் அவ்வாறான நிலைமையினை உறுவாக்குவதே பொதுபல சேனாவினூடாக அறங்கேற்றப்படுக்கின்ற திட்டமாக அன்று காணப்பட்டது. ஆனால் இறைவன் அதனை பொறுந்திக்கொள்ள வில்லை. இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்யும் அதிகாரம் தன்கையில் இருந்தும் கூட மீண்டும் தான் இந்த பதவியில் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற ஆசையினை மஹிந்தவின் மனதிலே உறுவாக்கி ஜனாதிபதி தேர்தலையும் உடனடியாக அறிவிப்புச் செய்யவைத்த எல்லாம்வல்ல இறைவன், அராசாங்கத்தை வீட்டுக்கும் அனுப்பிவைத்தான். 

இது எமது தாய்மார்ளினாலும், சகோதரிகளினாலும், எமது பிஞ்சு உள்ளங்களினாலும் தஹஜ்ஜத்திலும் ஏனைய தொழுகைகளிலும் கேட்கப்பட்ட துவாக்களின் பிரதிபளிப்பாகும். அந்த வகையிலே தற்போது எமது சகோதர சகோதரிகள் பர்மா நாட்டில் உண்ண உண்வின்றி, படுக்க இடமின்றி மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாளாந்தம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு வருக்கின்றனர். 

அவர்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் உடமைகளுக்காவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்குமாறு எனது அன்புள்ளம்மிக்க அனைத்து சகோதர சகோதரிகளையும் வேண்டிக்கொள்கின்றேன்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -