முஸ்லிம்கள் விரட்டப்படுவதன் அடிப்படை காரணம்-இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களே!

"இன்று பர்மாவில் முஸ்லிம்கள் விரட்டப்படுவதன் அடிப்படை காரணம்-இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களே" என்பதை இந்த காணொளி மூலம் விளங்க முடிகின்றது...

அன்பார்ந்த இலங்கை முஸ்லிம்களே...!

அல்லாஹ்வின் உதவியால் தற்காலத்தில் எமது நாட்டில் ஒரு அமைதியான சூழல் நிலவுகின்ற போதும் இன்னும் எமது மாற்று மத நண்பர்களின் உள்ளத்தில் இருந்து இஸ்லாம் பற்றி போதிக்க பட்ட தவறான கருத்துக்கள் களையப் படாமல் இன்னும் அவர்களின் மனதில் பதிந்து பொய் உள்ளதை யாரும் மறுக்க முடியாது...

எனவே இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை, தவறான புரிதல்களை எம்மால் இயன்ற அளவு மாற்று மதத்தவர்களின் உள்ளங்களில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

>>குறிப்பாக இன்றுள்ள சமூக வலைய தளங்கள் , முக நூல் என்பன இந்த செயற்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு களமாக இன்று நோக்க பட வேண்டியுள்ளது..

>>>இன்று முக நூலில் , வலைய தளங்களில் மாற்று மதத்தவர்களை நட்பு வாட்டாரங்களில் இணைத்துக் கொண்டுள்ள பல முஸ்லிம்களே?

உங்கள் தகவல் பரி மாற்றங்கள் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்துகிறதா?

இல்லை இன்னும் இனத்துவேசத்தை அதிகரிக்கின்றதா? என்பதை உங்கள் மனதில் ஒரு முறை கேட்டு பாருங்கள்.

- அதே நேரம் மாற்று மதத்தவர்களில் ஒருவர் இஸ்லாம் பற்றி தவறான விமர்சனக் கருத்துக்களை முன் வைக்கும் போது, வலைய தளங்களில் பகிரும் போது, அதற்கு விளக்கம் அளிக்க முற்படும் நாங்கள் அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாக, அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஒழுக்கத்துடன், அவர்களின் உள்ளம் இஸ்லாத்தை பற்றிய தவறான கருத்துக்கு மேலும் வித்திடாமல் இருக்கும் வண்ணம் விடை அளிப்பது கூட நபியவர்களின் தஹ்வா முறையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

வீடியோ---> 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -