எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை திருமணம் முடிப்பதற்காக காத்திருக்கும் பெண்களுக்கான வீட்டுப் பிரச்சினை என்பது நீண்ட கால பிரச்சினையாகும். இதற்கு உலமாகட்சி என்ற வகையில் பல திட்டங்களை முன் வைத்து வருகிறோம். அத்திட்டங்களை செயற்படுத்துவதாயின் நிச்சயம் அரசியல் அதிகாரம் தேவை என்று உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக வரதட்சனை விடயமாக இவர் வழங்கிய கருத்து தொடர்பாக பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு தீர்வு திட்டங்களை இதற்காக ஆராய்ந்து வரும் இவர் அது தொடர்பாக மேலும் கருத்து வெளியிடுகையில்,
கல்முனையின் நாயகனாக எம் எஸ் காரியப்பர் இருந்த போது அம்பாறை மாவட்டமுஸ்லிம்களின் காணி வீட்டு பிரச்சினையை தீர்க்க இங்கினியாகலை கல்லோய திட்டத்தைபயன்படுத்தினார். ஆனால் கல்முனை முஸ்லிம்களின் தூர நோக்கற்ற சிந்தனை காரணமாகஇந்த விடயம் கைவிடப்பட்டது. பலரும் தமக்கு கிடைத்த காணிகளை விற்றுவிட்டு ஓடி வந்துவிட்டனர்.
இதன் மூலம் ஒரு விடயம் மிக தெளிவாக உள்ளது. அதாவது அரசியல் அதிகாரத்தின் மூலமும்அந்த அரசியலை சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுத்துவதன் மூலமும்தான் நிச்சயம்இவற்றுக்கு தீர்வு காணலாம் என்பதில் உலமா கட்சி உறுதியாக உள்ளது. அம்பாறை மாவட்டமுஸ்லிம்கள் கிழக்கு தலைமையை கொண்ட உலமா கட்சியை பலப்படுத்துவதன் மூலம்முஸ்லிம்களின் வீட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற உத்தரவாதத்தைவழங்குகிறோம். என்றும் குறிப்பிட்டுள்ளார்.